
தமிழ் சினிமாவில் இவ்வாண்டு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. சியான் விக்ரம் பல வருடங்களாக தனது ரசிகர்களுக்காக ஒரு சோலோ மெகா ஹிட் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ‘வீர தீர சூரன்’ மிகப்பெரிய வெற்றியை கண்டுள்ளது. ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் இப்படத்தை புகழ்ந்து குவித்து வருகின்றனர்.
2025ல் அஜித், சூர்யா கலக்கவா?
விக்ரமுக்குப் பிறகு அஜித், சூர்யா ஆகியோர் இந்த ஆண்டு வெற்றிப் பட்டியலில் இணைவார்களா? என்பது ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ மற்றும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய Buzz உருவாக்கியுள்ளன.
🚀 ரெட்ரோ படத்தின் சூப்பர் ஹைப்!
சூர்யா நடிப்பில் ‘ரெட்ரோ’ படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான “கனிமா” பாடல் இணையத்தை அலறவிடும் அளவுக்கு வைரலாகியுள்ளது. பூஜா ஹெக்டே-வின் Traditional Look ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளது. ‘கங்குவா’ தோல்விக்கு பின், இந்த படம் சூர்யாவுக்கான பெரிய கம்பேக் ஆகுமா? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
🔥 அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ அப்டேட்!
அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் கூட “ஜனநாயகன் இந்த வருடம் வராது, அதனால் குட் பேட் அக்லி பெரிய வெற்றி பெறும்” என எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் BIGGEST BLOCKBUSTER எது?
🎬 விக்ரமின் ‘வீர தீர சூரன்’
🎬 அஜித்தின் ‘குட் பேட் அக்லி’
🎬 சூர்யாவின் ‘ரெட்ரோ’
🎬 ரஜினியின் ‘கூலி’
🔥 உங்களின் எதிர்பார்ப்பு எது? கமெண்டில் சொல்லுங்க! 😍🎥