நடிகர் ஸ்ரீ, கடைசி நாட்களில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இளம் வயதிலேயே எலும்பும் தோலுமாக காணப்படும் அவரின் தோற்றம் பலரையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘வழக்கு எண் 18/9’ மூலம் அறிமுகமான ஸ்ரீ, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தவர். ‘மாநகரம்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘சோன் பப்டி’ உள்ளிட்ட படங்களில் அவரின் நடிப்புத் திறமை பாராட்டப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே அவரை திரையில் காண முடியவில்லை.
சமீபத்தில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் ஸ்ரீ, மிகவும் பலவீனமான உடற்கட்டுடன், ஏதோ மன வேதனையில் மூழ்கியதுபோல் காட்சியளிக்கிறார். இது அவரது ரசிகர்களிடையே பதட்டத்தையும், கேள்விகளையும் தூண்டியுள்ளது.

இது போதைப் பொருள் அடிமையா? அல்லது நீண்ட நாட்களாக சினிமா வாய்ப்புகள் இல்லாத மன விரக்தியா? அல்லது உடல்நலக் காரணமா என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும் அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதே ஒரே விருப்பம்.
அவரது முன்னைய ஹீரோ தோற்றத்தையும், தற்போதைய சோகமூட்டும் தோற்றத்தையும் ஒப்பிட்டு, “எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார்?” என இணையத்தில் கலங்கும் கருத்துகள் அதிகம் பதிவாகி வருகின்றன.
தற்போது வரை ஸ்ரீ எந்தவித விளக்கமும் தரவில்லை. அவர் தனது நிலையைத் திறந்தவையாக பகிர்ந்தால் தான் உண்மையான நிலைமை எதுவென்று தெரியும். ரசிகர்கள் அனைவரும் தற்போது ஒன்றாகக் கேட்டுக்கொள்கிறார்கள் — “ஸ்ரீ, நீ நலமாக இருக்கணும்!