Skip to content
Celebrity

பாரதிராஜாவின் மகன் ‘மனோஜ் பாரதிராஜா’ மாரடைப்பால் மரணம்

பிரபல இயக்குநர் பாரதிராஜா-வின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. தாஜ்மஹால், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதாகும் மனோஜ், சில வாரங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்திருந்தார். இருப்பினும், இன்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மனோஜ், […]
மனோஜ் பாரதிராஜா

பிரபல இயக்குநர் பாரதிராஜா-வின் மகன் மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. தாஜ்மஹால், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதாகும் மனோஜ், சில வாரங்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்திருந்தார். இருப்பினும், இன்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனோஜ், 1999 ஆம் ஆண்டு தனது தந்தை பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதில், அவருக்கு ஜோடியாக ரியா சென் நடித்திருந்தார். இசைஞானி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

அதன்பின், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜூனா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். நடிகராக மட்டுமின்றி, விருமன் மற்றும் மாநாடு போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார்.

சமீபத்தில், இயக்குநராக மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த மனோஜ், இந்த படத்தின் மூலம் புதிய பரிட்சயமாக இருந்தார். இந்த படத்திற்காக இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றியிருந்தார்.

மனோஜின் மறைவு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *