
ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் OTT உரிமை ரூ.120 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ரிலீஸுக்கு முன்பே புதிய சாதனை படைத்துள்ளது.
Coolie Movie Digital Rights Update
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம், ரஜினியின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, அமீர் கான், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்துள்ளனர்.
Coolie Shooting Update
‘கூலி’ படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படக்குழு தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில், லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளில் வெளியான புகைப்படங்களில், ரஜினி, நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்டோர் இணைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
Coolie Movie OTT Deal

இந்நிலையில், ‘கூலி’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை படப்பிடிப்பு முடிவதற்கும் முன்பே அமேசான் பிரைம் வீடியோவில் ரூ.120 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், ‘ஜெயிலர்’ படத்திற்கும் (ரூ.100 கோடி) மேலாக விற்பனையான மிக உயர்ந்த டிஜிட்டல் உரிமை படமாக ‘கூலி’ சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.