நடிகர்-இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் தொடர்பில் இருக்கிறேன் என்ற வதந்திகளை நடிகை திவ்யபாரதி முற்றிலும் நிராகரித்து, இது குறித்து முதல் முறையாகவும் கடைசி முறையாகவும் பதிலளித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் வதந்திகளை உறுத்தும் வகையில், நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வாயிலாக வெளிப்படையாக பேசியுள்ளார். இதன் மூலம், ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது குடும்ப பிரச்சனைகளுக்கு தன்னால் எந்தவிதமான தொடர்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
நடிகர் ஜிவி பிரகாஷ் தற்போது தனது மனைவியுமான பின்னணி பாடகர் சைந்தவியுடன் விவாகரத்து பெற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்த பிரிவுக்கு காரணமாக திவ்யபாரதி இருப்பதாக சில வதந்திகள் பரவின. இதைத் தெளிவாக மறுத்த திவ்யபாரதி, “நான் ஒரு நடிகருடனோ, குறிப்பாக திருமணமாகியுள்ள ஒருவருடனோ காதலிக்க மாட்டேன்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது ஸ்டேட்ட்மெண்ட்டில்,
“எனது பெயரை, எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத ஒரு குடும்ப பிரச்சனையில் இழுத்துவருவது தவறு. GV பிரகாஷின் குடும்ப விஷயங்களில் எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. நேராகச் சொல்வதானால், நான் ஒரு நடிகரையும் காதலிக்க மாட்டேன்; அதிலும் திருமணமானவரை விரும்பவே மாட்டேன்.”
என குறிப்பிட்டிருந்தார்.
மேலும்,
“இதுவரை நான் அமைதியாக இருந்தேன். இந்த வதந்திகள் கவனிக்க வேண்டிய அளவிற்கு இல்லை என்று நினைத்தேன். ஆனால் இப்போது எல்லை மீறப்பட்டுள்ளது. என்னுடைய நற்பெயரை இழுக்க முயற்சிக்கிறார்கள். அதை ஏற்க மாட்டேன்.”
என தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் எதுவும் பேச மாட்டேன் என்றும்,
“நான் ஒரு தன்னம்பிக்கையுள்ள பெண். என்னைப் பற்றிய மதிப்பை வதந்திகளால் நிர்ணயிக்க முடியாது. நல்ல விஷயங்களை பேசுவோம். வேறெதையும் வேண்டாம். இது தொடர்பான எனது முதல் மற்றும் கடைசி பதிலாக இதையே கருதுங்கள்.”
என்று திவ்யபாரதி வலியுறுத்தியுள்ளார்.

திவ்யபாரதி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் முன்னதாக பேச்சுலர் மற்றும் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கிங்ஸ்டன் படத்தின் பிரமோஷன்களில் ஜிவி பிரகாஷும் இருவருக்கிடையிலான காதல் வதந்திகளை மறுத்து விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.