Skip to content
Movies

‘ஜன நாயகன்’ தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற்ற முன்னணி நிறுவனம்!

விஜய் தற்போது இயக்குநர் எச். வினோத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் அரசியல் சாயல் கொண்ட கிரைம் திரில்லர் திரைப்படமான ‘Jana Nayagan’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படம், விஜய்யின் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை […]
Jana Nayagan vijay

விஜய் தற்போது இயக்குநர் எச். வினோத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் அரசியல் சாயல் கொண்ட கிரைம் திரில்லர் திரைப்படமான ‘Jana Nayagan’ படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.

Jana Nayagan vijay

இந்த படம், விஜய்யின் கடைசி படமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 2026 ஜனவரி 9-ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்திற்குள் முடிவடையுமென கூறப்படுகிறது.

🔗 இதையும் படிக்க: விஜய்யின் ஜனநாயகனில் அட்லீ, லோகேஷ், நெல்சன் ரோல் என்ன?

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ‘ஜன நாயகன்’ படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘தி கோட்’ படத்திற்கு வெளியீட்டு உரிமை பெற்றிருந்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இப்போது ‘ஜன நாயகன்’ படத்தையும் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திரையரங்க வட்டாரத்தில் இந்த படம் இன்னும் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

🎥 இந்த செய்தி பிடித்ததா?

தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் செய்திகள், திரைப்பட அப்டேட்ஸ், டிரெய்லர்கள், விமர்சனங்கள் மற்றும் பிரபலங்களின் பிரத்யேக தகவல்களை உடனுக்குடன் பெற Tamil Cine Media YouTube சேனலை Subscribe செய்யுங்கள்.

▶ YouTube-ல் Subscribe செய்யுங்கள்

Join Telegram Now

தமிழ் சினிமா அப்டேட்களை Google News-ல் Follow செய்யுங்கள் Breaking News, OTT, Reviews மற்றும் Celebrity அப்டேட்களை உடனுக்குடன் பெறுங்கள். Add as a preferred source on Google

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *