ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் எழுந்த நிலையில், தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த முழு தகவல் உள்ளே!

தவறை உணர்ந்த பிரகாஷ்ராஜ் – மன்னிப்பு கோரும் வீடியோ வெளியீடு!

🚨 சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டம் பலரை பெரும் நெருக்கடியை சந்திக்க செய்யும் நிலையில், இதுபோன்ற செயலிகளை விளம்பரங்களில் பிரபல நடிகர்கள் விளம்பரம் செய்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இதனால் ஏராளமானோர் பண இழப்பால் தற்கொலை செய்யும் சூழல் உருவாகி உள்ளது.

🎬 நடிகர் சரத்குமாரும் இதுபோன்ற சூதாட்ட விளம்பர சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

📢 இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது இணையதள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

பிரகாஷ்ராஜ் வெளியிட்ட வீடியோவில்…

🎤 “2016 ஆம் ஆண்டு ஒரு சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பிறகு தான் எனது தவறை உணர்ந்தேன். ஆனாலும், 9 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த முடிவிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அவரது இந்த மன்னிப்பு ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெறித்தனமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *