
Siragadikka Aasai: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்று மிக முக்கியமான திருப்பம் நிகழ இருக்கிறது. காசு கொடுக்காமல் ஏமாற்றிய மேனேஜரை உண்மையை சொல்ல வைக்க மீனா திட்டம் இடுகிறாள். அவள் முயற்சி வெற்றிபெறுமா?
இன்றைய எபிசோடில், வீட்டில் அழுதுக்கொண்டிருக்கும் மீனாவிற்கு முத்து அழைத்து பேசுகிறார். “இன்னைக்கு பணம் கொடுக்க முடியவில்லை, நாளைக்கு கொடுக்க சொன்னார்கள்” என அவர் சொல்ல, “வந்தோன வேலை செய்தவங்களுக்கு கொடுத்திடு” என்கிறார் முத்து. மீனா கண்ணீருடன் ஒப்புக்கொள்கிறாள்.
அடுத்த நாள், குடும்பத்தினரிடம் இந்த விவகாரத்தை பகிர்ந்துக்கொள்கிறாள். சத்யாவுடன் சேர்ந்து இன்ஸ்பெக்டரிடம் முறையிட அவர் ஆலோசனை தருகிறார். “பத்திரத்தில் கையெழுத்து போடும்போது, சரியாக படித்து உறுதி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.
மீனா விஷயத்தை மறைக்க நினைக்க, விஜயா அவளை வளைத்துக்கொண்டு பேச முயல்கிறாள். கடைசியில், “உங்க டான்ஸ் ஸ்டூடண்ட் சிந்தாமணியிடம் கேட்டா புரியும்” என்று எஸ்கேப் ஆகிறாள் மீனா.

இதற்கிடையில், பைனான்சியர் மீனாவிற்கு அழைப்பு விடுக்கிறார். “மண்டபத்திலிருந்து இன்னும் பணம் வரவில்லை, வந்தவுடன் தருகிறேன்” என சமாளிக்க, “உன்னை இப்படியா நினைச்சேன்?” என அவர் சந்தேகமாக பேசுகிறார்.
அண்ணாமலை கடைக்காரர் கொடுத்த கிழிந்த நோட்டின் விவரத்தை கூற, மீனாவிற்கு ஒரு ஐடியா வருகிறது. ஏமாற்றிய மேனேஜரை அவனுடைய வாயாலேயே உண்மையை சொல்ல வைக்க முடிவு செய்கிறாள். ஸ்ருதி, சீதாவுடன் திட்டம் வகுக்கும் அவள், வெற்றிபெறுவாரா? அல்லது இது இன்னும் ஒரு தடையாக மாறுமா? என்பதை காண இன்றைய எபிசோட் அவசியம் பார்க்க வேண்டியது தான்!