
பிரபல இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘Gangers’ படம் ஏப்ரல் 24 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘அரண்மனை 4’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, சுந்தர் C இயக்கிய ‘Gangers’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுந்தர் C & வடிவேலு கூட்டணி மீண்டும் நகைச்சுவை வெறியுடன் திரைக்கு வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பெற பல விநியோகஸ்தர்கள் போட்டியிடுகின்றனர்.

சுந்தர் C நாயகனாக நடிப்பதோடு, தயாரிப்பையும் மேற்கொண்டுள்ளார். அதேசமயம், வடிவேலு ‘Gangers’ சிங்காரம் எனும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். காத்ரின் தெரசா, முனிஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘Gangers’ படத்தை முடித்ததும், சுந்தர் C, நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பணிகளை தொடங்கவுள்ளார்.