
வடசென்னை 2 திரைப்படத்திலிருந்து இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதிய இயக்குநர் மற்றும் நடிகர் மணிகண்டன் ஹீரோவாக நடிக்க உள்ளாரா?
Vadachennai 2 Update:
வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு அதிரடி எதிர்பார்ப்பு உருவாகும். இந்த கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய நான்கு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றவை. குறிப்பாக, கேங்க்ஸ்டர் கதையம்சம் கொண்ட வடசென்னை 2018ஆம் ஆண்டு வெளியான போது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வடசென்னை படத்தில் தனுஷுடன் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணனின் இசையும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. முதல் பாகத்தின் இறுதியில், அன்பு கதாபாத்திரத்தின் எழுச்சியை மையமாக கொண்டு இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.
Dhanush, Vetrimaaran Exit?
2018ஆம் ஆண்டிலேயே வடசென்னை 2 படத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல் இருந்தாலும், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் பிசியாகிவிட்டதால் இந்த படம் தள்ளிப்போனது. தற்போது, இருவருமே இப்படத்திலிருந்து விலகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
New Hero – Manikandan?

வெற்றிமாறனுக்கு பதிலாக அவரிடம் உதவி இயக்குநராக இருந்த ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும், தனுஷுக்கு பதிலாக நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த மணிகண்டன், வடசென்னை 2 படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.